தமிழில் அனிமல் திரைப்படம்: 'இவர்தான் ஹீரோவாக நடிப்பார்' - சந்தீப் ரெட்டி வங்கா
|அனிமல் படத்தின் தமிழ் பதிப்பு குறித்து சந்தீப் ரெட்டி வங்கா பேசியுள்ளார்.
சென்னை,
பாலிவுட்டின் பிரபல நடிகரான ரன்பீர் கபூர் 'அர்ஜுன் ரெட்டி', 'கபீர் சிங்' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் 'அனிமல்' திரைப்படத்தில் நடித்தார். இவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்தார்.
இப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் ரூ.900 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது
இந்நிலையில், அனிமல் படத்தின் தமிழ் பதிப்பு குறித்து சந்தீப் ரெட்டி வங்கா பேசியுள்ளார். சமீபத்தில் சென்னையில் நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் அனிமல் பட டைரக்டர் சந்தீப் ரெட்டி வங்கா கலந்து கொண்டார். அப்போது அவர், எனது அனிமல் படத்தின் தமிழ் பதிப்பில் ரன்பீர் கபூர் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் சூர்யாதான் எனது முதல் தேர்வு. என்றார்
இதனை வரவேற்கும் விதமாக ரசிகர்கள் உற்சாகமாக சத்தம் போட்டனர். இதனையடுத்து படம் குறித்தான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
நடிகர் கார்த்தியும் இப்படத்தில் நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று ரசிகர்கள் கூறிவருகின்றனர்.