< Back
சினிமா செய்திகள்
சமுத்திரக்கனி, தம்பி ராமையா நடித்துள்ள ராஜாகிளி படத்தின் டீசர் வெளியானது..!
சினிமா செய்திகள்

சமுத்திரக்கனி, தம்பி ராமையா நடித்துள்ள 'ராஜாகிளி' படத்தின் டீசர் வெளியானது..!

தினத்தந்தி
|
1 March 2023 10:29 PM IST

சமுத்திரக்கனி, தம்பி ராமையா நடித்துள்ள 'ராஜாகிளி' திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

சென்னை,

தம்பி ராமையா கதை, வசனம் எழுதி அவரது மகன் உமாபதி ராமையா இயக்கியுள்ள திரைப்படம் 'ராஜாகிளி'. இந்த படத்தில் சமுத்திரக்கனி, தம்பி ராமையா இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மேலும் இந்த படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், பழ கருப்பையா, இளவரசு, ஆடுகளம் நரேன், ரேஷ்மா, டெப்பா, ஜி.பி.முத்து உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இந்த படத்திற்கு தம்பி ராமையா இசையமைத்துள்ளார்.

கோபிநாத், கேதார்நாத் இருவரும் ஒளிப்பதிவு செய்துள்ளனர். சுதர்சன் ஆர் படத்தொகுப்பு செய்கிறார். இந்த நிலையில் இந்த படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த டீசர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விரைவில் இந்த திரைப்படம் வெளியாக உள்ளது.

மேலும் செய்திகள்