< Back
சினிமா செய்திகள்
தங்கலான் படக்குழுவை பாராட்டிய சமுத்திரக்கனி
சினிமா செய்திகள்

'தங்கலான்' படக்குழுவை பாராட்டிய சமுத்திரக்கனி

தினத்தந்தி
|
19 Aug 2024 6:30 PM IST

'தங்கலான்' படக்குழுவை பாராட்டி சமுத்திரக்கனி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சென்னை,

இயக்குனர் பா. இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி மற்றும் பலர் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் 'தங்கலான்'. ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படம் கடந்த 15-ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியானது.

ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகயும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தங்கலான் முதல் நாளில் மட்டும் உலகளவில், ரூ.26 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. தற்போது வரை இந்தப்படம் ரூ.65 கோடி வசூலித்துள்ளது.

இந்தநிலையில், நடிகர் சமுத்திரக்கனி தங்கலான் படக்குழுவை பாராட்டி தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், தங்கலான் படத்திற்கு அசுர உழைப்பு கொடுத்த தம்பி பா.ரஞ்சித், தீ பிடிக்கும் அளவுக்கு நடித்த விக்ரம் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள் என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்