< Back
சினிமா செய்திகள்
படப்பிடிப்பு தளத்தில் பிறந்தநாள் கொண்டாடிய சமுத்திரகனி
சினிமா செய்திகள்

படப்பிடிப்பு தளத்தில் பிறந்தநாள் கொண்டாடிய சமுத்திரகனி

தினத்தந்தி
|
26 April 2024 10:28 PM IST

"கேம் சேஞ்சர்" படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது

சென்னை,

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் ராம்சரண் "கேம் சேஞ்சர்" படத்தில் நடித்து வருகிறார். அரசியல் அதிரடி திரில்லர் படமாக இது உருவாகியுள்ளது.இயக்குனர் சங்கர் தெலுங்கு மொழியில் இயக்கும் முதல் படம் இதுவே. சங்கருடன் இணைந்து இயக்குனர் கார்த்தி சுப்பராஜ் இப்படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார்.கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்.ஜே சூர்யா, சமுத்திரகனி, நாசர் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். தமன் இசையமைக்க திரு ஒளிப்பதிவு மேற்கொள்ள தில் ராஜு இப்படத்தை தயாரித்துள்ளார்.

"கேம் சேஞ்சர்" படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று தனது 51வது பிறந்த நாள் முன்னிட்டு இயக்குனர் சமுத்திரகனி, இயக்குனர் சங்கருடன் படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி கொண்டாடினார். இது தொடர்பான பவீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்