< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
திகில் கதையில் சமுத்திரக்கனி
|19 May 2023 10:32 AM IST
நந்தா பெரியசாமி இயக்கத்தில் புதிய படம் தயாராகிறது. இதில் சமுத்திரக்கனி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அனன்யா, பாரதிராஜா, நாசர் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். சின்னி ஜெயந்த் உள்ளிட்ட மேலும் பலர் நடிக்கின்றனர். மனிதநேய உணர்வுகளின் கலவையோடு காட்சிக்கு காட்சி பதட்டமாக பரபரப்பான திகில் கதையம்சத்தில் இந்தப் படம் தயாராவதாக டைரக்டர் தெரிவித்தார்.
சமுத்திரக்கனி கதையை கேட்டதும் மொத்தமாக தேதிகள் ஒதுக்கி படத்தில் முழு ஈடுபாட்டுடன் நடிப்பதாகவும் அவர் கூறினார். கேரள எல்லையில் மேகமலை, குமுளி, மூணாறு பகுதிகளில் படப்பிடிப்பு தொடங்கி ஒரே கட்டமாக முடிய உள்ளது. இந்தப் படத்துக்கு சீதாராமம் புகழ் விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். சினேகன், ராஜுமுருகன், இளங்கோ கிருஷ்ணன் பாடல்கள் எழுதுகின்றனர். ஒளிப்பதிவு: சுகுமார்.