< Back
சினிமா செய்திகள்
திருப்பதி கோவிலில் நடிகர் அருள்நிதி குடும்பத்தினருடன் சாமி தரிசனம்
சினிமா செய்திகள்

திருப்பதி கோவிலில் நடிகர் அருள்நிதி குடும்பத்தினருடன் சாமி தரிசனம்

தினத்தந்தி
|
27 Jan 2024 8:07 PM IST

நடிகர் அருள்நிதி தற்போது அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 'டிமான்டி காலனி' படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்துள்ளார்.

திருப்பதி,

நடிகர் அருள்நிதி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடும்பத்தினருடன் இன்று சாமி தரிசனம் செய்தார். தரிசனத்துக்கு பிறகு கோவில் வளாகத்தில் உள்ள ரங்கநாயக்க மண்டபத்தில் வேத ஆசீர்வாதங்கள் முழங்க தீர்த்த மற்றும் லட்டு பிரசாதங்கள் அவருக்கு வழங்கப்பட்டது.

மாறுபட்ட கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர் அருள்நிதி, தற்போது இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 'டிமான்டி காலனி' படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்துள்ளார்.

கடந்த 2015-ம் ஆண்டு 'டிமான்டி காலனி' திரைப்படம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அதன் இரண்டாம் பாகம் உருவாகி உள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல் வெளியாகி கவனம் பெற்றது.

மேலும் செய்திகள்