< Back
சினிமா செய்திகள்
சமூக வலைதளங்களில் வைரலாகும் சமந்தாவின் உடற்பயிற்சி
சினிமா செய்திகள்

சமூக வலைதளங்களில் வைரலாகும் சமந்தாவின் உடற்பயிற்சி

தினத்தந்தி
|
4 July 2024 1:39 AM IST

சமந்தா உடற்பயிற்சி செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னை,

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையான சமந்தாவுக்கு தமிழ், தெலுங்கு திரை உலகில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தெலுங்கு மொழியில் ஏராளமான படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்தார். இந்நிலையில் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் சமந்தா. பின்னர் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர்.

இதையடுத்து மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கிய சமந்தா மயோடிசிஸ் என்ற அரியவகை நோயினால் பாதிக்கப்பட்டார். சிகிச்சைக்காக சினிமாவில் இருந்து ஓய்வெடுத்த சமந்தா ஆன்மீகம், உடற்பயிற்சி யோகா ஆகியவற்றில் தீவிர ஆர்வம் காட்டினார். நோயில் இருந்து மீண்டு வந்த சமந்தா புதிய படங்களில் நடிக்க தொடங்கி இருக்கிறார்.

இந்த நிலையில் ஆண்களுக்கு நிகராக உடற்பயிற்சி செய்யும் வீடியோவை சமந்தா வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உடற்பயிற்சி செய்யும் வீடியோ மூலம் அவரது உடல்நிலை பற்றிய வதந்தி தூள் தூளானது.

மலையாளத்தில் மம்மூட்டியுடன் ஒரு படத்திலும், ஷாருக்கானுடன் இந்தியில் புதிய படத்திலும் நடிக்க இருக்கும் சமந்தா விஜய் நடிக்கும் 69-வது படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும் செய்திகள்