< Back
சினிமா செய்திகள்
கவர்ச்சியில் கிறங்க வைத்த சமந்தா: மேடையிலேயே ரொமான்ஸ் செய்த விஜய் தேவரகொண்டா
சினிமா செய்திகள்

கவர்ச்சியில் கிறங்க வைத்த சமந்தா: மேடையிலேயே ரொமான்ஸ் செய்த விஜய் தேவரகொண்டா

தினத்தந்தி
|
16 Aug 2023 1:00 PM IST

நடிகை சமந்தாவும் விஜய் தேவரகொண்டாவும் மேடையிலேயே ரொமான்ஸ் செய்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

ஐதராபாத்,

ஐதராபாத்தில் நடந்த 'குஷி' திரைப்படத்தின் இசைக் கச்சேரி விழாவில் நடிகர் விஜய் தேவரகொண்டா, நடிகை சமந்தா இணைந்து நடனமாடிய வீடியோ வைரலாகி உள்ளது.

நடிகை சமந்தா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் இணைந்து குஷி படத்தில் நடித்திருக்கும் நிலையில் இந்த படத்தினை ஷிவா நிர்வாணா இயக்கி உள்ளார். வரும் செப்டம்பர் 1ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. பான் இந்திய படமாக குஷி உருவாகி இருக்கும் நிலையில் இதற்கான புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

குஷி படத்திற்கு ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைக்க இதற்குரிய பாடல் வரிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் டிரெண்டிங் ஆனது. அதிலும் குறிப்பாக முதல் பாடலான என் ரோஜா நீ என்கின்ற பாடல் அனைத்து மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்றது.

தற்பொழுது குஷி படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் படக் குழுவினர் புரொமோஷனில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்கள்.

அப்படி விஜய் தேவரகொண்டா, சமந்தா இருவரும் நேற்று நடந்த மியூசிக்கல் கான்சர்ட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அதில் இவர்களை தொடர்ந்து படக் குழுவினரும் கலந்து கொண்டார்கள். இந்நிகழ்ச்சியில் குஷி பட பாடலுக்கு நடனமாடி சமந்தா, விஜய் தேவரகொண்டா பெரிதளவில் கவர்ந்துள்ளார்கள். அதில் சமந்தா கவர்ச்சி உடையில் இருக்க விஜய் தேவரகொண்டா அலேக்கா தூக்கி ரொமான்ஸ் செய்யும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளன.

மேலும் செய்திகள்