< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
சமந்தா நடித்துள்ள 'சாகுந்தலம்' படத்தின் புதிய பாடல் வெளியானது..!
|2 Feb 2023 6:18 PM IST
சமந்தா நடித்துள்ள 'சாகுந்தலம்' திரைப்படத்தின் 'ஏலேலோ ஏலேலோ' என்ற பாடல் வெளியாகி உள்ளது.
சென்னை,
நடிகை சமந்தா தற்போது சரித்திர கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ள 'சாகுந்தலம்' படத்தில் நடித்துள்ளார். மலையாள நடிகர் தேவ் மோகன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தை குணசேகர் இயக்கியுள்ளார். ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு மணிசர்மா இசையமைத்துள்ளார்.
இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் 'சாகுந்தலம்' திரைப்படத்தின் டிரைலர் மற்றும் இரண்டு பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றது.
இந்த நிலையில், இந்த படத்தின் மூன்றாவது பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. 'ஏலேலோ ஏலேலோ' என்ற அந்த பாடலை கபிலன், நவீன் பாரதி எழுதியுள்ளனர். அனுராக் குல்கர்னி பாடியுள்ளார். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.