மலையாளத்தில் அறிமுகமாகும் சமந்தா?
|நடிகை சமந்தா தனது முதல் மலையாள படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை,
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து பின்னர் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார். பின்னர் மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டார்.
இதனால் சினிமாவை விட்டு சில மாதங்கள் ஒதுங்கி இருந்தார். நோய் பாதிப்பிற்காக சிகிச்சை பெற்று வந்தார். இச்சிகிச்சைக்கு பின் உடல்நிலை தேறி மீண்டும் நடிக்க வந்துள்ளார்.
இந்நிலையில், நடிகை சமந்தா தனது முதல் மலையாள படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தில் நடிகர் மம்முட்டிக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக தெரிகிறது. மேலும், இதனை இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்குவதாகவும் கூறப்படுகிறது.
நடிகை சமந்தா கடைசியாக விஜய் தேவரகொண்டா ஜோடியாக 'குஷி' படத்தில் நடித்திருந்தார். தற்போது 7 மாதங்களுக்கு பிறகு படத்தில் நடிக்க உள்ளார். மலையாளத்தில் அறிமுகமாக இருப்பதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.