42 கிலோ...தீவிர உடற்பயிற்சியில் சமந்தா
|தீவிர உடற்பயிற்சிகளை செய்து, முன்புபோல ‘சிக்' மேனிக்கு சமந்தா மாறியிருக்கிறார்.
சென்னை,
தென் இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக ஜொலித்த சமந்தா, மயோசிடிஸ் என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டார். சிகிச்சைக்காக ஒரு வருட காலம் சினிமாவில் இருந்தும் ஒதுங்கினார். தற்போது சிகிச்சையில் உடல்நலம் முன்னேறிய சமந்தா, மீண்டும் படங்களில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார்.
தற்போது 'சிட்டாடல்' என்ற வெப் தொடரில் அவர் நடித்துள்ளார். இந்த வெப் தொடர் விரைவில் வெளியாக உள்ள நிலையில், முன்பு போல மீண்டும் படவாய்ப்புகளை பெற காய்களை நகர்த்தி வருகிறார் சமந்தா.
இதற்காக அவ்வப்போது தனது கவர்ச்சி படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டும் கவனம் ஈர்த்து வருகிறார். அதேவேளை தீவிர உடற்பயிற்சிகளை செய்து, முன்புபோல 'சிக்' மேனிக்கு சமந்தா மாறியிருக்கிறார். சமந்தா 42 கிலோ எடை தூக்கும் வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. இதனால் சமந்தா ரசிகர்கள் குஷியாகி இருக்கிறார்கள். 'மீண்டும் உங்களை திரையில் பார்க்க ஆசைப்படுகிறோம்' என்றெல்லாம் கருத்துகளை பதிவிட்டும் வருகிறார்கள்.