< Back
சினிமா செய்திகள்
Samantha Ruth Prabhu to join Alia Bhatt for Jigra
சினிமா செய்திகள்

'ஜிக்ரா': ஆலியா பட்டுடன் இணையும் சமந்தா?

தினத்தந்தி
|
7 Oct 2024 8:19 AM IST

'ஜிக்ரா' படத்தின் புரொமோஷன் பணியில் படக்குழு ஈடுபட உள்ளதாக தெரிகிறது.

சென்னை,

கடந்த 2012-ல் வெளியான 'ஸ்டூடண்ட் ஆப் தி இயர்' என்ற படத்தின் மூலம் அறிமுகமான ஆலியா பட், 'ஹைவே, உட்தா பஞ்சாப், ராஜி, கல்லி பாய், ராக்கி ராணி' போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.

தற்போது ஆலியா பட், இயக்குனர் வாசன் பாலா இயக்கத்தில் ' ஜிக்ரா' என்ற புதிய படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை ஆலியா பட்டின் எடர்னல் சன்ஷைன் புரொடக்சன்ஸ் மற்றும் கரண் ஜோகரின் தர்மா புரொடக்சன்ஸ் இணைந்து தயாரித்துள்ளது.

சமீபத்தில் இப்படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் வெளியாகி வைரலாகின. இப்படம் வருகிற 11-ம் தேதி இந்தி மற்றும் தெலுங்கில் வெளியாக உள்ளநிலையில், புரொமோஷன் பணியில் படக்குழு ஈடுபட உள்ளதாக தெரிகிறது.

அதன்படி, இந்த படத்தின் தெலுங்கு புரொமோஷன் நிகழ்ச்சியில் நடிகை சமந்தா சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்