< Back
சினிமா செய்திகள்
நடிகை சமந்தாவின் அன்றாட பணிகள் இவைதான்..! வீடியோ
சினிமா செய்திகள்

நடிகை சமந்தாவின் அன்றாட பணிகள் இவைதான்..! வீடியோ

தினத்தந்தி
|
12 Sept 2024 5:25 PM IST

காலையில் எழுந்தது முதல் இரவு வரை தான்செய்த அன்றாட பணிகளை நடிகை சமந்தா வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

சென்னை,

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இவருக்கு தமிழ், தெலுங்கு திரை உலகில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தெலுங்கு மொழியில் ஏராளமான படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்கிறார். நான் ஈ, அஞ்சான், கத்தி, 24, தெறி, மெர்சல் போன்ற பிரபலமான படங்களில் கதாநாயகியாக நடித்து மக்கள் மனதை கவர்ந்தார்.

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட சமந்தா, பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர். ஜீவனாம்சம் தேவையில்லை என சமந்தா நாகை சைதன்யாவை விட்டு விலகி விட்டார்.

நடிகை சமந்தா மயோசிடிஸ் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார். சமீப காலமாக அவர் எடுத்து வரும் சிகிச்சை மற்றும் மருத்துவம் பற்றி பாட்காஸ்ட் மூலம் பகிர்ந்து வருகிறார். நடிகை சமந்தா, தற்போது ரெட் லைட் தெரபி சிகிச்சை பெற்றுள்ளார். இந்த தெரபி மூலம் சருமத்தில் உள்ள திசுக்களை புதுப்பிக்க முடியும் என்று கூறப்படுகிறது.

கடந்த ஆகஸ்ட் மாதம் நடிகை சோபிதா துலிபாலாவுடன் நாகசைதன்யா நிச்சயம் செய்து கொண்ட நிலையில், இதனால் தான் சமந்தாவை அவர் விவாகரத்து செய்தார் என பேச்சுக்கள் கிளம்பியுள்ளன. ஆனால், மறுதிருமணம் குறித்து இதுவரை யோசிக்காத நடிகை சமந்தா தினமும் தனது வாழ்க்கை எப்படி எல்லாம் போகிறது என்பது குறித்த வீடியோ ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார்

தினமும் காலை எழுந்தால் 6.30 மணிக்கு சூரிய உதயத்தை பார்த்து உடலுக்கு தேவையான வைட்டமின்களை எடுத்துக் கொள்வேன். அதன் பின்னர், ஆயில் புல்லிங் செய்வேன். 7 மணிக்கு ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்வேன். அதன் பின்னர் விளக்கேற்றி கடவுளை வழிபடுவேன். காரில் செல்லும் போது கண்களை பாதுகாத்துக்கொள்ள சிகிச்சை செய்துக் கொள்வேன். 9 மணிக்கு படப்பிடிப்பு தளத்துக்கு சென்று விடுவேன். 9 மணிக்கு ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சமந்தா சென்ற பின்னர் ஐஸ் பவுலில் முகத்தை உள்ளே விட்டு கழுவி பிரெஷ் ஆகிவிடுவேன். அதன் பின்னர், மேக்கப் போடப்பட்டு ஷூட்டிங் செல்வேன். பின்னர் மாலை 6 மணிக்கு ரெட் லைட் தெரபி எடுத்துக் கொள்வேன். 7 மணிக்கு டென்னிஸ் விளையாடி மகிழ்வேன். இரவு 9.30 மணிக்கு தியானம் செய்வேன். அதன் பின்னர் 10 மணிக்கு உறங்க சென்றுவிடுவேன் என நடிகை சமந்தா ஒரு நாள் முழுவதும் தான் என்னவெல்லாம் செய்வேன் என்பதை வீடியோவாகவே வெளியிட்டுள்ளார்.

'மா இண்டி பங்காரம்' படத்தில் ஆக்சன் நாயகியாகவே நடிக்க உள்ளதும் குறிப்பிடத்தக்கது. மலையாளத்தில் மம்மூட்டியுடன் கௌதம் மேனன் படத்தில் அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிட்டாடல் தொடர் சமந்தா நடித்துள்ள பாகம் விரைவில் வெளியாகவிருக்கிறது.

மேலும் செய்திகள்