< Back
சினிமா செய்திகள்
திருமண உடையை அடையாளம் தெரியாமல் மாற்றிய சமந்தா... வைரலாகும் வீடியோ
சினிமா செய்திகள்

திருமண உடையை அடையாளம் தெரியாமல் மாற்றிய சமந்தா... வைரலாகும் வீடியோ

தினத்தந்தி
|
26 April 2024 5:40 PM IST

திருமணத்தின் போது தான் அணிந்திருந்த உடையை விருது விழா ஒன்றிற்காக நடிகை சமந்தா ரீ-யூஸ் செய்திருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்திய அளவில் பிரபல நடிகையாக இருக்கும் சமந்தா சமீபத்தில் மயோசிடிஸ் எனும் அரிய வகை தசை அழற்சி நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். தொடர் சிகிச்சைக்குப் பிறகு ஓரளவு அதிலிருந்து மீண்டுள்ளார். சிகிச்சை எடுத்துக் கொள்வதற்கா அமெரிக்கா மற்றும் தென் கொரியா நாடுகளுக்குச் சென்றதால் ஒரு ஆண்டு வரை சினிமாவிலிருந்து விலகி இருந்த சமந்தா தற்போது நடிப்பில் கவனம் செலுத்துகிறார். கடைசியாக விஜய் தேவரகொண்டாவுடன் நடித்த குஷி திரைப்படம் நல்ல வரவேற்பினை பெற்றது.

நடிகர் நாக சைதன்யாவை கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் செய்த சமந்தா 2021-ல் விவாகரத்துப் பெற்றது குறிப்பிடத்தக்கது. நாகசைதன்யாவுடன் இந்து, கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்துகொண்டார். தற்போது, கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்த அன்று அணிந்திருந்த உடையை புதியதாக மாற்றியமைத்து அணிந்துள்ளார் சமந்தா.

கிறிஸ்துவ முறைப்படி நடந்த திருமணத்தில் நடிகை சமந்தா வெள்ளை நிற வெட்டிங் கவுன் அணிந்திருந்தார். திருமணத்தின் போது தான் அணிந்திருந்த உடையை விருது விழா ஒன்றிற்காக நடிகை சமந்தா ரீ-யூஸ் செய்திருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகையாக மட்டுமல்லாது, தனது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத வாழ்க்கைமுறையை முன்னெடுத்து, பலருக்கும் இன்ஸ்பிரேஷனாக இருக்கும் சமந்தாவுக்கு பிரபல நிறுவனம் விருது வழங்கியுள்ளது.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட நடிகை சமந்தா, "இன்று நான் அணிந்திருக்கும் ஆடை என்னுடைய பழைய உடையின் மாற்றியமைத்தது. எனது பழக்கவழக்கங்களை மாற்றுவதுபோல இந்த பழைய ஆடைகளை மாற்றி உடுத்திகொள்கிறேன். கவனித்து எடுக்கும் ஒவ்வொரு சிறிய முடிவும் வாழ்க்கையில் முக்கியமானது" எனக் கூறியுள்ளார்.

இந்த வீடியோவைப் பகிர்ந்து, 'புதிய நினைவுகளை உருவாக்க முடியும். சொல்வதற்குக் நிறைய கதைகள் இருக்கிறது. புதிய நினைவுகளை உருவாக்கவும் மற்றொரு புதிய கதையை உருவாக்கவும் இந்த உடைக்கு புது வடிவத்தைக் கொடுத்துள்ளோம்' என உடையை டிசைன் செய்த சமந்தாவின் நண்பர் பஜாஜ் கூறியுள்ளார்.

சமீபத்தில் நடிகை ஷோபிதா துலிபலாவுடன் நாகசைதன்யா அவுட்டிங் சென்றார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலான நிலையில் இப்போது சமந்தா தனது திருமண உடையை இப்படி மாற்றியிருப்பது ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகி இருக்கிறது.

மேலும் செய்திகள்