< Back
சினிமா செய்திகள்
Samantha Ruth Prabhu On Life After Divorce From Naga Chaitanya And Myositis Diagnosis: I Went Through Fire To Get Here
சினிமா செய்திகள்

விவாகரத்து, மயோசிடிஸ் நோய்க்கு பிறகான வாழ்க்கை குறித்து பேசிய சமந்தா

தினத்தந்தி
|
16 July 2024 9:49 AM IST

முன்பை விட தற்போது ஆன்மிகம் அதிகம் தேவைப்படுவதாக சமந்தா கூறினார்.

சென்னை,

நடிகை சமந்தா, நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து பிரிந்து விட்டார். மேலும், மயோசிடிஸ் நோயால் சமந்தா பாதிக்கப்பட்டிருந்தார். தற்போது அவர் குணமாகி படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். இந்நிலையில், விவாகரத்து, மயோசிடிஸ் நோய்க்கு பிறகான வாழ்க்கை குறித்து சமந்தா பேசியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

'நாம் அனைவரும் நம் வாழ்க்கையில் சில விஷயங்களை மாற்ற விரும்புகிறோம். என்னிடம் இருந்த விஷயங்களை நான் கடந்து வந்திருப்பதை சில நேரங்களில் நினைத்து பார்ப்பேன். ஆனால், வேறு வழியில்லை. கடந்த 3 வருடங்களில் சில விஷயங்கள் நடந்திருக்கக் கூடாது என்று நினைத்தேன். இதை பற்றி என் நண்பரிடம் பேசியிருக்கிறேன்.

வாழ்க்கை நமக்கு அனைத்தையும் சமாளிக்க கற்றுத்தருகிறது. இப்போது நான் வலுவாக இருக்கிறேன். அதற்கு ஆன்மிக ஈடுபாடுதான் காரணம் . இன்றைய உலகில், முன்பை விட ஆன்மிகம் அதிகம் தேவைப்படுகிறது. ஏனென்றால் தற்போது நோயும், வலியும் அதிகமாக உள்ளது,'என்றார்.

மேலும் செய்திகள்