சிகிச்சை எடுத்ததால், எனது அழகு குறைந்து விட்டதா? கேலி செய்தவருக்கு சமந்தா பதில்
|சிகிச்சை எடுத்ததால், எனது அழகு குறைந்து விட்டதா என்று கேலி செய்தவருக்கு சமந்தா பதிவை பகிர்ந்தார்.
நடிகை சமந்தா 'மயோசிடிஸ்' என்ற அரிய வகை தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் சினிமாவில் நடிப்பதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார். வெளிநாடு சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ள திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது அவர் மெலிந்து காணப்படுகிறார். சமந்தா நடித்துள்ள சாகுந்தலம் படம் தமிழ், தெலுங்கில் வெளியாக இருப்பதையொட்டி ஐதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றில் பங்கேற்றார்.
அதில் சமந்தா பேசும்போது உணர்ச்சிவசப்பட்டு அழுத புகைப்படங்கள் வெளியானது. அவரது புகைப்படங்களை பார்த்த ஒருவர், ''சமந்தாவின் அழகெல்லாய் போய்விட்டது. இதற்காக வருத்தப்படுகிறேன்'' என்று கேலி செய்து பதிவிட்டு இருந்தார். இந்த பதிவை பார்த்த சமந்தா அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ''நான் மாதக்கணக்கில் மருந்துகளும், சிகிச்சையும் எடுத்துக்கொள்வது போன்ற நிலைமை உங்களுக்கும் வந்து விடக்கூடாது என பிரார்த்தனை செய்கிறேன். உங்கள் அழகு பிரகாசமாக என்னிடம் இருந்து அன்பை தருகிறேன்'' என்ற பதிவை பகிர்ந்தார்.
சமந்தாவின் பதிவு வைரலாகிறது. சிகிச்சை எடுத்ததால் சமந்தா அழகு குறைந்து விட்டதாக விமர்சித்தவரை ரசிகர்களும் கண்டித்து வருகிறார்கள்.