< Back
சினிமா செய்திகள்
சமந்தாவை மிஞ்சிய கீர்த்தி சுரேஷ்
சினிமா செய்திகள்

சமந்தாவை மிஞ்சிய கீர்த்தி சுரேஷ்

தினத்தந்தி
|
11 Sept 2022 3:52 PM IST

நடிகை சமந்தா அணிந்திருந்த அதே போல் உள்ள உடையை அணிந்து புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தார் கீர்த்தி சுரேஷ்.

தென் இந்திய சினிமாவின் முன்னணி கதாநாயகியாக விளங்கி வருபவர் சமந்தா. விவாகரத்துக்கு பின்னர் சினிமாவில் படு பிஸியாக அவர் நடித்துக்கொண்டிருக்கிறார். தனது படங்களும் பெரிய அளவில் வெற்றி பெற்று வருவதால் சமந்தா மிகவும் பூரிப்பில் இருக்கிறார். சினிமாவைப் போலவே சமூக வலைதளங்களிலும் சமந்தா மும்முரமாக செயல்படுகிறார். கவர்ச்சி படங்களை வெளியிடுவது, ரசிகர்களுடன் கலந்துரையாடுவது என பரபரப்புடன் இருக்கிறார். சமீபத்தில் மாடர்ன் உடை அணிந்து சமந்தா தனது கலக்கல் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் அவரைப் போலவே உடை அணிந்து கீர்த்தி சுரேஷ் தனது புகைப்படங்களையும் இணையதளத்தில் வெளியிட்டிருக்கிறார். இந்த இரண்டு புகைப்படங்களும் தற்போது இணையதளத்தை கலக்கி வருகின்றன. அந்த மாடர்ன் உடையில் யார் அழகாக இருக்கிறார்கள்? இன்றைக்கு தீர்மானிக்க ரசிகர்கள் திணறுகிறார்கள். சிலர் இந்த போட்டி இன்னும் நீள வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து இருக்கிறார்கள். ஆனால் பலரும் சமந்தாவை கீர்த்தி சுரேஷ் மிஞ்சி விட்டதாகவே கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.

அதை விட சமந்தாவின் ரசிகர்கள், 'எங்கள் தலைவி போல கவர்ச்சியாக உடை அணிந்து கலக்க முடியுமா?' என்றும் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். எது எப்படியோ இனி ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்.

மேலும் செய்திகள்