ஆசிரமத்தில் சமந்தா தியானம்
|கோவையில் உள்ள ஈஷா யோகா மைய ஆசிரமத்துக்கு சென்றுள்ளார்
சமந்தா தெலுங்கு படமான குஷி மற்றும் சிட்டாடல் வெப் தொடர்களில் நடித்து முடித்து விட்டு கோவில்களுக்கு ஆன்மீக பயணம் தொடங்கி இருக்கிறார். சில தினங்களுக்கு முன்பு வேலூரை அடுத்து ஸ்ரீபுரத்தில் உள்ள தங்க கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அங்குள்ள சுவர்ண லட்சுமி அம்மன் சிலைக்கு பால் அபிஷேகம் செய்தார்.
இந்த நிலையில் தற்போது கோவையில் உள்ள ஈஷா யோகா மைய ஆசிரமத்துக்கு சென்றுள்ளார். அங்கு பக்தர்கள் கூட்டத்தின் மத்தியில் அமர்ந்து கழுத்தில் சிவப்பு அரளி பூ மாலை அணிந்தபடி கண்ணை மூடிக்கொண்டு தியானம் செய்யும் புகைப்படங்களை தனது வலைத்தளத்தில் வெளியிட்டு தியானமே என் வலிமை என்ற பதிவையும் பகிர்ந்துள்ளார். அவை வைரலாகின்றன.
சமந்தாவுக்கு மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோய் பாதிப்பு உள்ளது. இதற்காக ஏற்கனவே சிகிச்சை பெற்றும் பூரண குணமாகவில்லை. இதையடுத்து ஒரு வருடம் சினிமாவை விட்டு விலகி அமெரிக்கா சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ள முடிவு செய்து இருக்கிறார். இதற்காக ஏற்கனவே மூன்று புதிய படங்களில் நடிக்க வாங்கிய அட்வான்ஸ் தொகையை திருப்பி கொடுத்து விட்டார்.