< Back
சினிமா செய்திகள்
சரித்திர படங்களை விரும்பும் சமந்தா
சினிமா செய்திகள்

சரித்திர படங்களை விரும்பும் சமந்தா

தினத்தந்தி
|
9 April 2023 7:27 AM IST

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னனி கதாநாயகியாக இருக்கும் சமந்தா, தற்போது 'சாகுந்தலம்' என்ற புராண படத்தில் நடித்துள்ளார். துஷ்யந்தன், சகுந்தலை வாழ்க்கை கதையாக தயாராகி உள்ளது. இதில் சமந்தா சகுந்தலை கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். இந்த படம் திரைக்கு வர உள்ளது.

இந்த நிலையில் சமந்தா அளித்துள்ள பேட்டியில், "எனக்கு சிறுவயதில் இருந்தே சரித்திர புராண படங்களை பிடிக்கும், அதுமாதிரியான படங்களை விரும்பி பார்ப்பேன். அதுபோன்ற படங்களில் நடிக்க வேண்டும் என்பதும் எனது கனவாக இருந்தது. இந்த நிலையில்தான் 'சாகுந்தலம்' படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இந்த படத்தில் சகுந்தலை கதாபாத்திரத்தில் என்னால் நடிக்க முடியுமா, நூறு சதவீதம் கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்வேனா? என்றெல்லாம் மலைப்பாக இருந்தது. கடந்த மூன்று ஆண்டுகளாக நிறைய சவால்களை எதிர்கொண்டேன். சகுந்தலை கதாபாத்திரத்தை என்னால் செய்ய முடியுமா என்ற பயமும் இருந்தது. தயாரிப்பாளர் என்னால் முடியும் என்று நம்பிக்கையை கொடுத்தார். இந்த படத்தில் நடித்ததால் எனது கனவு நிறைவேறியது'' என்றார்.

மேலும் செய்திகள்