< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
மகிழ்ச்சியில் சமந்தா
|20 Nov 2022 3:48 PM IST
சமந்தா நடிப்பில் வெளியான யசோதா படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் நல்ல வசூல் பார்த்துள்ளது. இதனால் சமந்தா மகிழ்ச்சியில் இருக்கிறார்.
இதுகுறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் நெகிழ்ச்சியோடு சமந்தா வெளியிட்டுள்ள அறிக்கையில், "ரசிகர்களுக்கு வணக்கம். 'யசோதா' படத்தை நீங்கள் பாராட்டியதை அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன். 'இந்த படத்துக்காக படக்குழுவினர் கொடுத்த உழைப்பு பலன் அளித்து இருக்கிறது என்பதற்கு உங்கள் விசில் சத்தம் சான்று. தற்போது நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். யசோதா படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி. படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இந்த படத்தில் என்னை நம்பி பெரிய கதாபாத்திரத்தை கொடுத்து இருந்தனர்.
இதில் வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன் மற்றும் சிறந்த நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியது அருமையாக இருந்தது'' என்று கூறியுள்ளார்.