< Back
சினிமா செய்திகள்
மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு செல்லும் சமந்தா
சினிமா செய்திகள்

மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு செல்லும் சமந்தா

தினத்தந்தி
|
8 July 2023 1:04 PM IST

தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் சமந்தா கணவர் நாகசைதன்யாவை விவாகரத்து செய்து விட்டு தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவரது நடிப்பில் வந்த சாகுந்தலம் படம் தோல்வி அடைந்தது. ஏற்கனவே சமந்தாவுக்கு மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோய் பாதிப்பு ஏற்பட்டது.

இதற்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்தார். ஆனாலும் பூரண குணமாகவில்லை. இந்த நோய் பாதிப்பினால் மிகவும் கஷ்டப்படுவதாக தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் ஒரு வருடம் சினிமாவை விட்டு விலகி முழுமையான சிகிச்சை எடுத்துக்கொள்ள சமந்தா முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

இதற்காகவே புதிய படங்கள் எதிலும் அவர் ஒப்பந்தமாகவில்லை. மயோசிடிஸ் நோய் உயர் சிகிச்சைக்காக சமந்தா அமெரிக்காவுக்கு செல்ல இருப்பதாக நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள். சமந்தா தெலுங்கில் நடித்து வந்த குஷி படத்தை முடித்து விட்டார். சிட்டாடல் வெப் தொடரிலும் நடித்து முடித்து இருக்கிறார். அடுத்து உடல் ஆரோக்கியத்தில் முழு கவனம் செலுத்த இருக்கிறார்.

மேலும் செய்திகள்