< Back
சினிமா செய்திகள்
நள்ளிரவில் வீடியோ கால் , நடிகருடன் நெருக்கம் காட்டும் சமந்தா?
சினிமா செய்திகள்

நள்ளிரவில் வீடியோ கால் , நடிகருடன் நெருக்கம் காட்டும் சமந்தா?

தினத்தந்தி
|
30 Aug 2023 10:03 AM IST

சமந்தா தற்போது விஜய்தேவரகொண்டாவுடன் நெருக்கமாக பழகி வருவதாக கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.

கணவர் நாகசைதன்யாவை விவாகரத்து செய்து பிரிந்த சமந்தா தற்போது பிரபல தெலுங்கு நடிகர் விஜய்தேவரகொண்டாவுடன் நெருக்கமாக பழகி வருவதாக கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.திரைக்கு வர உள்ள குஷி படத்தில் இருவரும் ஜோடியாக நடித்து இருக்கிறார்கள்

குஷி படத்தின் டிரெய்லரில் இருவரின் எல்லை மீறிய நெருக்கமான படுக்கை அறை காட்சிகள் இடம்பெற்று இருந்தன. சமீபத்தில் குஷி பட விழாவில் கவர்ச்சி உடையில் வந்த சமந்தாவை விஜய்தேவர கொண்டா அலேக்காக தூக்கிய வீடியோ வெளியாகி வைரலானது.

இரு தினங்களுக்கு முன்பு ஐதராபாத்தில் உள்ள தியேட்டரில் தெலுங்கு படத்தை பார்க்க சென்ற சமந்தாவின் முன்னாள் கணவர் நாகசைதன்யா இடைவேளையில் திரையிடப்பட்ட குஷி டிரெய்லரை பார்த்து கடுப்பாகி தொடர்ந்து படத்தை பார்க்காமல் வெளியேறி விட்டார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது சமந்தா தசை அழற்சி நோய் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளார். சமந்தாவுக்கு விஜய்தேவரகொண்டா நள்ளிரவில் வீடியோ கால் செய்து அவரை மிஸ் செய்வதாக கூறி உள்ளார். விஜய்தேவரகொண்டா, சமந்தா இடையே ஏற்பட்டுள்ள நெருக்கம் எந்தமாதிரியானது? காதலா? என்றெல்லாம் ரசிகர்கள் வலைத்தளத்தில் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்