விவாகரத்து குறித்து சமந்தா கருத்து
|அகங்காரமும், பயமும்தான் நம்மை தூரமாக்கிவிட்டது என்ற உருக்கமான பதிவை சமந்தா பகிர்ந்துள்ளார்.
நடிகை சமந்தாவும், தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவும் காதலித்து திருமணம் செய்து பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். இரு தினங்களுக்கு முன்பு நாகசைதன்யா அளித்த பேட்டியில், "சமந்தாவுடன் வாழ்ந்த நாட்களை நான் கவுரவிக்கிறேன். சமந்தா மிகவும் நல்ல பெண். நல்ல மனம் படைத்தவர். அவர் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். சமூக வலைதளத்தில் வந்த வதந்தியால்தான் எங்களுக்குள் பிரச்சினை ஆரம்பம் ஆனது. அது மெல்ல மெல்ல பெரிதாகி பின்னர் பிரிந்து விட வேண்டிய நிலைமை வந்தது. நாங்கள் பிரிந்து விட்டாலும் ஒருவர் மீது ஒருவர் மரியாதை வைத்து இருக்கிறோம்'' என்றார்.
நாகசைதன்யா கருத்துக்கு பதில் அளிக்கும் வகையில் சமந்தா தனது வலைத்தள பக்கத்தில், "நாம் எல்லோரும் ஒன்றுதான், கேவலம் அகங்காரமும், பயமும்தான் நம்மை தூரமாக்கிவிட்டது'' என்ற உருக்கமான பதிவை பகிர்ந்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் "சமந்தாவும், நாகசைதன்யாவும் ஈகோவால்தான் பிரிந்துள்ளார்கள் என்று உணர்ந்து நீங்கள் இருவரும் மீண்டும் ஒன்று சேர வேண்டும்'' என்ற பதிவுகளை வெளியிட்டு வருகிறார்கள்.