அரசியலுக்கு வரும் சமந்தா...?
|கட்சி நிர்வாகிகள் சமந்தாவை தொடர்பு கொண்டு பேசி வருவதாகவும் கூறப்படுகிறது
நடிகை சமந்தா அரசியலில் ஈடுபடப்போவதாக தகவல் பரவி உள்ளது. ஏற்கனவே பிரதியுஷா என்ற அமைப்பை தொடங்கி ஏழைகளுக்கு உதவிகள் செய்து சமூக சேவை பணிகளில் ஈடுபட்டு வருகிறார். தெலுங்கானாவில் உள்ள விவசாயிகளுக்கு ஆதரவாகவும் செயல்படுகிறார்.
கைத்தறி நெசவாளர்களால் தயாரிக்கப்பட்ட துணிகளின் விளம்பர தூதராகவும் அரசு இவரை நியமித்து உள்ளது. இதையடுத்து தெலுங்கானாவில் கே.சந்திரசேகர் ராவின் பாரத ராஷ்டிர சமிதி கட்சியில் இணைந்து அரசியலில் ஈடுபட முடிவு செய்து இருப்பதாக தெலுங்கு இணைய தளங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன.
இது சம்பந்தமாக அந்த கட்சியின் நிர்வாகிகள் சமந்தாவை தொடர்பு கொண்டு பேசி வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனாலும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.
சமந்தா நடிப்பில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் தயாரான குஷி படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கிறது. தற்போது மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோய் சிகிச்சைக்காக சமந்தா வெளிநாடு சென்று இருக்கிறார். இதனால் புதிய படங்களில் நடிப்பதை நிறுத்தி வைத்துள்ளார்.