இந்திய அவெஞ்சர்ஸ்: விஜய் சூப்பர் ஹீரோவாக நடிக்கலாம் - நடிகை சமந்தா
|சமந்தாவின் ஆசையை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்று விஜய் ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மும்பை,
தி மார்வெல்ஸ் திரைப்படம் வருகிற 10-ம் தேதி இந்திய ரசிகர்களுக்காக வெளியாக உள்ளது. இந்நிலையில் அந்த படத்தினுடைய புரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார் நடிகை சமந்தா.
தி மார்வெல்ஸ் பட புரமோஷன் பணிகளில் ஈடுபட்டிருந்த நடிகை சமந்தா, இந்திய அவெஞ்சர்ஸ் கதை உருவானால் அதில் நிச்சயம் சூப்பர் ஹீரோக்களாக அல்லு அர்ஜுன், பிரியங்கா சோப்ரா மற்றும் ஆலியா பட் உள்ளிட்டவர்கள் நடிக்க வேண்டும் என்று கூறினார். அதேபோல நடிகர் தளபதி விஜய் அவர்களும் சூப்பர் ஹீரோவாக நடித்தால் கணக்கச்சிதமாக இருக்கும் என்று அவர் கூறினார்.
தளபதி விஜய் சூப்பர் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்கின்ற சமந்தாவின் ஆசையை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்று விஜய் ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தளபதி விஜயுடன் இணைந்து கத்தி, தெறி மற்றும் மெர்சல் ஆகிய மூன்று படங்களில் சமந்தா நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.