'உங்களுக்காக வாழுங்கள்' ரசிகர்களுக்கு சமந்தா அறிவுரை
|'கூட்டத்தோடு ஒருவராக இல்லாமல் உங்களுக்காக நீங்கள் நிற்பது எப்போதுமே சிறந்த விஷயம்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
தெலுங்கில் விஜய் தேவரகொண்டா, சமந்தா நடித்துள்ள 'குஷி' படம் அடுத்த மாதம் (செப்டம்பர்) திரைக்கு வர இருக்கிறது. சமீபத்தில் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா ஐதராபாத்தில் நடந்தது. இதில் சமந்தா கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் விழாவில் பங்கேற்கவில்லை.
விழா நடைபெற்ற இடத்துக்கு அருகில் தான் சமந்தாவின் இல்லம் இருக்கிறது என்றபோதும் அவர் விழாவில் பங்கேற்காதது பல்வேறு விமர்சனங்களையும் எழுப்பியது.
இதற்கிடையில் சமந்தா தனது டுவிட்டர் பக்கத்தில் நேற்று ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர், "நீங்கள் இந்த உலகத்திற்காக வாழ வேண்டும் என்று அவசியமில்லை. உங்கள் மதிப்பை நீங்கள் உணர வேண்டும். உங்களை நீங்களே தான் உயர்த்திக்கொள்ள வேண்டும்.
உங்கள் ஆன்மாவுக்காக வாழுங்கள். உங்களைச் சுற்றி இருப்பவர்களுக்காக அல்ல. உங்களை இந்த சமூகம் புரிந்து கொள்ளாமல் போகலாம். ஆனால், நீங்கள் அப்படி இருக்கக்கூடாது. கூட்டத்தோடு ஒருவராக இல்லாமல் உங்களுக்காக நீங்கள் நிற்பது எப்போதுமே சிறந்த விஷயம்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள சமந்தா ஒரு வருட காலம் சினிமாவை விட்டு ஒதுங்கி, சிகிச்சை மேற்கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது.