8 நடிகைகளுடன் உறவு முறிவு: சல்மான்கானுக்கு ராசியில்லாத காதல்
|சல்மான் கான் காதலிக்காத பாலிவுட் நடிகைகளே இல்லையென சொல்லலாம். ஐஸ்வர்யா ராய் தொடங்கி இத்தாலிய மாடல் நடிகை வரை சல்மான் கானின் காதல் லிஸ்ட்டில் இடம்பெற்றுள்ளனர்.
இந்தித் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் சல்மான்கானுக்கு 57 வயது ஆகிறது. இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. ஏற்கனவே பல நடிகைகளுடன் அவருக்கு காதல் வந்தது. ஆனால் அது திருமணம் வரை செல்லாமல் பாதியிலேயே முறிந்துவிட்டது.
நடிகைகள் சங்கீதா பிஸ்லானி, ஐஸ்வர்யாராய், சினேகா உள்ளல், சோமி அலி, கத்ரினா கைப். இத்தாலிய மாடல் நடிகை லூலியா, ஜெர்மன் மாடல் நடிகை கிளாடியா சிஸ்லா, மற்றும் ஜார்ன்கான் ஆகியோரை காதலித்ததாக கூறப்பட்டது. இந்த நடிகைகள் பல்வேறு காரணங்களால் சல்மான்கானை விட்டுப்பிரிந்தனர்.
தற்போது பூஜா ஹெக்டேவும் சல்மான்கானும் காதலிப்பதாக தகவல் பரவி உள்ளது. இருவரும் கிசிகா பாய் கிசிகி ஜான் என்ற இந்திப்படத்தில் ஜோடியாக நடித்துள்ளனர். படப்பிடிப்பில் இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளதாக இந்திப்பட உலகினர் பேசி வருகிறார்கள்.
இதுகுறித்து சல்மான்கானிடம் கேட்டபோது அவர் அளித்துள்ள பேட்டியில் "காதல் எனக்கு ராசியானதாக இல்லை. எல்லா நடிகைகளுக்கும் நான் பாய்தான். நான் விரும்பும் பெண் என்னை ஜான் என்று அழைக்கவேண்டும் என்று விரும்புவேன். ஆனால் அவர் கூட என்னை பாய் என்றே அழைக்கிறார். நான் என்ன செய்வது'' என்று பதில் அளித்து அனைவரையும் சிரிக்கவைத்தார்.
சல்மான்கானை காதலிக்கவில்லை என்று பூஜா ஹெக்டேவும் மறுத்துள்ளார்.