< Back
சினிமா செய்திகள்
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் புதிய படத்தில் இணையும் சல்மான் கான்
சினிமா செய்திகள்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் புதிய படத்தில் இணையும் சல்மான் கான்

தினத்தந்தி
|
12 March 2024 3:33 PM IST

இப்படம் அடுத்த ஆண்டு ரம்ஜான் பண்டிகைக்கு வெளியாக உள்ளதாக ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார்.

மும்பை,

அஜித் நடிப்பில் வெளியான தீனா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ஏ.ஆர்.முருகதாஸ். அதன்பின்னர் விஜயகாந்த்தின் ரமணா. சூர்யாவின் கஜினி, 7ஆம் அறிவு, விஜய்யின் துப்பாக்கி, கத்தி, சர்கார், ரஜினியின் தர்பார் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார்.

கஜினி படம் ஹிட்டானதை அடுத்து 2008ம் ஆண்டு அவரின் திரையுலக பயணத்தை பாலிவுட் பக்கம் திருப்பினார். இவர் இயக்கிய கஜினி படத்தை அமீர்கானை வைத்து இந்தியில் ரீமேக் செய்தார். இந்த படம் ரூ.100 கோடி வசூலைதாண்டிய முதல் இந்தி படம் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்துள்ள ஏ.ஆர்.முருகதாஸ் பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் பாலிவுட் படம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், ஏ.ஆர்.முருகதாஸ் பாலிவுட்டில் தனது அடுத்த படத்தின் தகவல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். இப்படத்தில் சல்மான் கான் கதாநாயகனாக நடிக்க உள்ளார். மேலும் இப்படத்தை சஜித் நாடியாட்வாலா தயாரிக்கிறார்.

மேலும் இப்படம் அடுத்த ஆண்டு ரம்ஜான் பண்டிகைக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வ தகவலை தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். இத்திரைப்படத்தின் பட்ஜெட் 400 கோடி என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தகவலால் சல்மான் கான் ரசிகர்களின் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

மேலும் செய்திகள்