< Back
சினிமா செய்திகள்
Salman Khan and Atlee team up for a cameo role in Varun Dhawan’s Baby John
சினிமா செய்திகள்

கீர்த்தி சுரேஷ் படத்தில் அட்லீ, சல்மான்கான் - வெளியான அப்டேட்

தினத்தந்தி
|
3 July 2024 2:53 PM IST

’ஜவான்' படம் மூலம் பாலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானார் அட்லீ .

சென்னை,

ஷங்கரின் உதவி இயக்குனராக அறிமுகமாகி, இன்று பல ஹிட் படங்களை இயக்கி வருபவர் பிரபல இயக்குனர் அட்லி. இவர் 'ஜவான்' படம் மூலம் பாலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானார். இப்படம் ரூ.1,000 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்தது. தற்போது பாலிவுட்டில் அட்லி மற்றும் அவரது மனைவி பிரியாவின் ஏ பார் ஆப்பிள் ஸ்டுடியோஸ், ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் முராத் கெதானியின் சினி-1 ஸ்டுடியோஸ் ஆகியவை இணைந்து "பேபி ஜான்" என்ற படத்தை தயாரித்து வருகின்றன.

கடந்த 2016-ம் ஆண்டு விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவான திரைப்படம் 'தெறி'. இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படம் இந்தியில் தற்போது உருவாகி வருகிறது. இப்படத்தில் வருண் தவான் கதாநாயகனாகவும் கீர்த்தி சுரேஷ் மற்றும் வாமிகா கபி ஆகியோர் நாயகிகளாகவும் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, இயக்குனர் அட்லீ மற்றும் பாலிவுட் நடிகர் சல்மான்கான் ஆகியோர் 'பேபி ஜான்' படத்தில் கேமியோ ரோலில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. "பேபி ஜான்" படம் கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு டிசம்பர் 25 -ம் தேதி ரிலீசாக உள்ளது.

மேலும் செய்திகள்