< Back
சினிமா செய்திகள்
ஹீரோவுக்கு இணையான சம்பளம்... பிரியங்கா சோப்ரா மகிழ்ச்சி
சினிமா செய்திகள்

ஹீரோவுக்கு இணையான சம்பளம்... பிரியங்கா சோப்ரா மகிழ்ச்சி

தினத்தந்தி
|
23 April 2023 6:19 AM IST

சினிமா துறையில் கதாநாயகர்களை விட தங்களுக்கு சம்பளத்தை பல மடங்கு குறைத்து கொடுப்பதாக கதாநாயகிகள் தொடர்ந்து அதிருப்தி வெளியிட்டு வருகிறார்கள். ஹீரோக்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கும் சம்பளம் வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்கள். அவர்கள் கோரிக்கை ஏற்கப்படுவது இல்லை.

இந்த நிலையில் பிரியங்கா சோப்ரா முதல் தடவையாக ஹீரோவுக்கு சமமான சம்பளத்தை பெற்று இருக்கிறார். இதனால் மகிழ்ச்சியில் இருக்கும் பிரியங்கா சோப்ரா அளித்துள்ள பேட்டியில், "நான் முதல் தடவையாக ஹீரோவுக்கு இணையான சம்பளத்தை பெற்று இருக்கிறேன்.

எனது 22 வருட சினிமா வாழ்க்கையில் இதை அற்புதமான விஷயமாக கருதுகிறேன். இந்தி படங்களில் நடிக்கும்போது கொஞ்சம் அதிகம் சம்பளம் கேட்க வேண்டும் என்றாலே பயப்படுவேன். ஆனால் சிட்டாடல் வெப் தொடரில் நடிக்கும்போது சம்பள விஷயத்தில் கொஞ்சம் கறாராகவே இருந்தேன்.

எனது சக நடிகருக்கு சமமாக சம்பளம் வேண்டும் என்று கேட்டேன். ஏதோ அதிசயம் நடந்த மாதிரி அவர்களும் கதாநாயகனுக்கு இணையான சம்பளத்தை தர உடனே ஒப்புக்கொண்டனர். இதை இப்போதுகூட என்னால் நம்ப முடியவில்லை'' என்றார்.

மேலும் செய்திகள்