சகுந்தலை வேடம்... நடிகை சமந்தா நெகிழ்ச்சி
|சமந்தா நடித்துள்ள 'சாகுந்தலம்' படம் புராண காலத்து துஷ்யந்தன் கதையை மையமாக வைத்து தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் தயாராகி உள்ளது.
இந்த படத்தில் சகுந்தலை கதாபாத்திரத்தில் சமந்தா நடித்துள்ளார். மலையாள நடிகர் தேவ் மோகன் துஷ்யந்தனாகவும், மோகன்பாபு துர்வாச முனிவராகவும் அதிதி பாலன் அனுசுயாவாகவும் நடித்துள்ளனர். குணசேகர் இயக்கி உள்ளார்.
'சாகுந்தலம்' படம் கடந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. பல்வேறு காரணங்களால் ரிலீஸ் தள்ளிப்போனது. அனைத்து சிக்கலும் ஓய்ந்த நிலையில், ஒருவழியாக அடுத்த மாதம் வெளியாக இருக்கிறது
தற்போது 'சாகுந்தலம்' படம் சமந்தாவுக்கு திரையிட்டு காட்டப்பட்டது. படத்தை பார்த்து சமந்தா நெகிழ்ந்து போயுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், வெளியிட்ட பதிவில் "ஒருவழியாக 'சாகுந்தலம்' படத்தை பார்த்துவிட்டேன். இயக்குனர் குணசேகருக்கு என் இதயத்தை தருகிறேன். மிகப்பெரிய காவியங்களில் இந்த படமும் முக்கியமான ஒன்றாக இருக்கும். என்ன ஒரு படைப்பு இது. குடும்பத்துடன் இந்த படத்தை பார்ப்பவர்கள் உணர்ச்சிகளால் கட்டமைக்கப்படுவார்கள். குழந்தைகளும் ஒரு மாயாஜாலத்தை உணர போகிறார்கள். இப்படிப்பட்ட படத்தை எனக்கு கொடுத்ததற்கு படக்குழுவினருக்கு நன்றி'', என்று கூறியுள்ளார்.