< Back
சினிமா செய்திகள்
ரூ.110 கோடிக்கு மேல் வசூல் செய்த சைத்தான் திரைப்படம் - அதிகாரபூர்வ அறிவிப்பு
சினிமா செய்திகள்

ரூ.110 கோடிக்கு மேல் வசூல் செய்த 'சைத்தான்' திரைப்படம் - அதிகாரபூர்வ அறிவிப்பு

தினத்தந்தி
|
16 March 2024 6:08 AM IST

சூப்பர் நேச்சூரல் திரில்லர் படமாக உருவான 'சைத்தான்' திரைப்படம் கடந்த 8-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

மும்பை,

இயக்குனர் விகாஸ் பால் இயக்கத்தில் அஜய் தேவ்கன், மாதவன், ஜோதிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் 'சைத்தான்'. இந்த படத்துக்கு அமித் திரிவேதி இசையமைத்துள்ளார். சூப்பர் நேச்சூரல் திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள இந்த திரைப்படம் கடந்த 8-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த திரைப்படம் தொடர்ந்து வசூலை குவித்து வருகிறது. இந்த படம் வெளியான ஏழு நாட்களில் உலக முழுவதும் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியானது. பாலிவுட்டில் சுமார் 20 ஆண்டுகளுக்கு பின், திரும்பிய நடிகை ஜோதிகாவிற்கு இப்படம் ரூ.100 கோடி வசூலை குவித்த முதல் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.117.47 கோடி வசூல் செய்ததாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் இந்திய பாக்ஸ் ஆபீசில் 'சைத்தான்' திரைப்படம் ரூ.81.60 கோடி வசூல் செய்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்