< Back
சினிமா செய்திகள்
ஜூலை 15-ல் வெளியாகிறது சாய் பல்லவியின் கார்கி திரைப்படம்
சினிமா செய்திகள்

ஜூலை 15-ல் வெளியாகிறது சாய் பல்லவியின் 'கார்கி' திரைப்படம்

தினத்தந்தி
|
2 July 2022 11:28 PM IST

இந்த திரைப்படம் வருகிற ஜூலை 14ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

இயக்குனர் கெளதம் ராமசந்திரன் இயக்கத்தில் சாய் பல்லவி நடித்துள்ள திரைப்படம் 'கார்கி'. இந்த படத்தை சக்தி பிலிம் ஃபேக்டரி மற்றும் பிளாக் ஜெனி புரொடக்‌ஷன் இணைந்து தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். 'கார்கி' படத்தை சூர்யா, ஜோதிகாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் வழங்கவுள்ளது.

தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய 3 மொழிகளில் தயாராகி வருகிறது. இந்த நிலையில் ரீலீஸ் தேதியை அறிவித்துள்ளனர் படக்குழு.அதன்படி 'கார்கி' திரைப்படம் வருகிற ஜூலை 14ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Tags :
மேலும் செய்திகள்