< Back
சினிமா செய்திகள்
டாப் ஹீரோவின் மகனுக்கு ஜோடி.. பாலிவுட்டில் அறிமுகமாகும் சாய் பல்லவி
சினிமா செய்திகள்

டாப் ஹீரோவின் மகனுக்கு ஜோடி.. பாலிவுட்டில் அறிமுகமாகும் சாய் பல்லவி

தினத்தந்தி
|
14 Sept 2023 1:09 PM IST

தமிழில் ஹிட்டான லவ் டுடே படத்தின் ஹிந்தி ரீமேக்கிலும் ஜுனைத் கான் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் சாய் பல்லவி, தற்போது பாலிவுட்டில் அறிமுகமாகியிருக்கிறார். அதுவும் பாலிவுட்டில் சூப்பர் ஸ்டார் அமீர் கானின் மகன் ஜுனைத் கானுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார்.

பாலிவுட்டில் யஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் ஜுனைத் கான் தனது முதல் படத்தை நடித்து முடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், இரண்டாவது படத்தில் சாய் பல்லவியுடன் ஜோடி சேர உள்ளார். சுனில் பாண்டே இயக்கும் இப்படம், காதல் படமாக உருவாக உள்ளது.

இந்த படம் மட்டுமின்றி தமிழில் ஹிட்டான லவ் டுடே படத்தின் ஹிந்தி ரீமேக்கிலும் ஜுனைத் கான் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அந்த படத்தில் ஸ்ரீதேவியின் மகள் குஷி கபூர் ஹீரோயினாக நடிக்க போகிறார் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்.

மேலும் செய்திகள்