< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
பழங்குடி பெண்ணாக நடிக்கும் சாய்பல்லவி
|8 Sept 2022 9:07 AM IST
புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தில் பழங்குடி இன பெண் வேடத்தில் நடிக்க சாய் பல்லவியை படக்குழுவினர் அணுகி உள்ளனர்.
சாய் பல்லவிக்கு கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகள் வருகின்றன. சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான கார்கி படம் ரசிகர்கள் கவனத்தை பெற்றது. சாய்பல்லவி நடிப்புக்கு பாராட்டுகளும் கிடைத்தன. இந்த நிலையில் புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தில் பழங்குடி இன பெண் வேடத்தில் நடிக்க சாய் பல்லவியை படக்குழுவினர் அணுகி உள்ளனர்.முந்தைய படங்களில் சாய்பல்லவி அழுத்தமான வேடங்களில் நடித்துள்ளதால் அவரிடம் பழங்குடி பெண்ணாக நடிக்க பேசி வருகிறார்கள்.
புஷ்பா படத்தின் முதல் பாகத்தை போலவே இரண்டாம் பாகமும் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் தயாராக உள்ளது. படப்பிடிப்பை தொடங்கி உள்ளனர். புஷ்பா 2 படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா ஜோடியாக நடிக்கின்றனர். பகத்பாசிலும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார்.