சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
கல்லூரி படித்தபோது கத்ரீனா கைப் பட பாடலுக்கு நடனமாடிய சாய் பல்லவி - வீடியோ வைரல்
|17 April 2024 9:35 PM IST
கல்லூரி படிக்கும்போது கத்ரீனா கைப் மற்றும் அக்சய் குமார் நடித்த டீஸ் மார் கான் பாடலுக்கு சாய் பல்லவி நடனமாடியுள்ளார்.
சென்னை,
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சாய் பல்லவி. இவர் தற்போது ராமாயணம் படத்தில் சீதையாக நடித்து வருகிறார். மேலும் தமிழில், சிவகார்த்திகேயனின் 21-வது படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், சாய் பல்லவி கல்லூரி படித்தபோது விழாவில் நடனமாடிய வீடியோ தற்போது இணையத்தில் பரவி உள்ளது. அந்த வீடியோவில், அக்சய் குமார் மற்றும் கத்ரீனா கைப் நடிப்பில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான செயலாக்கி ஜவானி படத்தில் வரும் டீஸ் மார் கான் பாடலுக்கு நடனமாடுகிறார்.
அப்போது, மற்றொரு பெண்ணும் அவருடன் சேர்ந்து நடனமாடுகிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சாய் பல்லவி நடனமாடிய வீடியோ வைரலாவது இது முதல் முறை அல்ல. முன்னதாக அவரது சகோதரியின் நிச்சயதார்த்த விழாவில் குடும்பத்தினருடன் நடனமாடிய வீடியோ வைரலானது.