< Back
சினிமா செய்திகள்
ராமாயணம் படத்தில் சீதையாக சாய்பல்லவி - ராவணனாக ஹிருத்திக் ரோஷன்
சினிமா செய்திகள்

ராமாயணம் படத்தில் சீதையாக சாய்பல்லவி - ராவணனாக ஹிருத்திக் ரோஷன்

தினத்தந்தி
|
28 Oct 2022 8:46 AM IST

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் ராமாயண கதையை படமாக எடுப்போம் என்று அறிவித்த தெலுங்கு தயாரிப்பாளர் அல்லு அரவிந்தும் தற்போது பட வேலைகளை தொடங்கி உள்ளார்.

ராமாயண கதையை மையமாக வைத்து ஏற்கனவே ஆதிபுருஷ் படம் தயராகி வருகிறது. இதில் ராமராக பிரபாஸ். ராவணனாக சயீப் அலிகான், சீதையாக கீர்த்தி சனோன் நடிக்கின்றனர். மூன்று ஆண்டுகளுக்கு முன்பே தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் ராமாயண கதையை படமாக எடுப்போம் என்று அறிவித்த தெலுங்கு தயாரிப்பாளர் அல்லு அரவிந்தும் தற்போது பட வேலைகளை தொடங்கி உள்ளார். ஆதிபுருஷ் படம் காரணமாக நாங்கள் அறிவித்த ராமாயணம் படத்தை நிறுத்தவில்லை என்றும் அவர் கூறினார். ஒன்றரை வருடமாக தயாரிப்புக்கு முந்தைய பணிகள் நடந்து வருகின்றன என்றும், அடுத்த ஆண்டு படப்பிடிப்பை தொடங்கி விடுவோம் என்றும் அவர் உறுதிப்படுத்தி உள்ளார். பிரபாசின் ஆதிபுருஷ் ராமாயண படத்துக்கு போட்டியாக தயாராகும் அல்லு அரவிந்தின் ராமாயண படத்தில் நடிக்கும் நடிகர்-நடிகைகள் யார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த படத்தில் சீதை வேடத்தில் சாய் பல்லவியை நடிக்க வைக்க பரிசீலிப்பதாக தகவல் கசிந்துள்ளது. ராமர் வேடத்தில் ரன்பீர் கபூர், ராவணனாக ஹிருத்திக் ரோஷன் ஆகியோரை நடிக்க வைக்க பேசி வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்