< Back
சினிமா செய்திகள்
தன்ஷிகா நடித்துள்ள தி புரூப் - ரஜினிகாந்திடம் ஆசி பெற்ற படக்குழு
சினிமா செய்திகள்

தன்ஷிகா நடித்துள்ள 'தி புரூப்' - ரஜினிகாந்திடம் ஆசி பெற்ற படக்குழு

தினத்தந்தி
|
24 April 2024 3:21 PM IST

'தி புரூப்' திரைப்படம் அடுத்த மாதம் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை,

மாஞ்சா வேலு, பேராண்மை, கபாலி, இருட்டு உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் சாய் தன்ஷிகா. இவர் தற்போது கோல்டன் ஸ்டுடியோஸ்-23 என்ற பட நிறுவனம் சார்பில் கோமதி சத்யா தயாரிக்கும் 'தி புரூப்' என்ற புதிய படத்தில் நடித்துள்ளார். 'ஆக்சன்' படமாக உருவாகியுள்ள இந்த படத்தை இயக்குனர் ராதிகா மாஸ்டர் இயக்கியுள்ளார்.

மேலும் இந்த படத்தில் ரித்விகா, அசோக், ருத்வீர் வரதன், இந்திரஜா, மைம் கோபி, மாரிமுத்து, ராஜ சிம்மன், அஷ்மிதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் இந்த படம் வெளியாக உள்ளது. சமீபத்தில் 'தி புரூப்' படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் பெற்றது.

'தி புரூப்' திரைப்படம் அடுத்த மாதம் 3-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. படம் வெளியாவதை முன்னிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் 'தி புரூப்' படக்குழு ஆசி பெற்றுள்ளது. இது குறித்தான புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்