< Back
சினிமா செய்திகள்
டெட்பூல் & வோல்வரின் படத்தின் சாதனை குறித்து நடிகர் ரியான் ரெனால்டின் பதிவு
சினிமா செய்திகள்

'டெட்பூல் & வோல்வரின்' படத்தின் சாதனை குறித்து நடிகர் ரியான் ரெனால்டின் பதிவு

தினத்தந்தி
|
6 Aug 2024 5:55 PM IST

'டெட்பூல் & வோல்வரின்' படம் உலக பாக்ஸ் ஆபிஸில் அதிக வசூல் சாதனையை படைத்துள்ளது.

மார்வெல் படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக, அவெஞ்சர்ஸ் படம் அனைவருக்கும் பிடித்த படமாக உள்ளது. அதில் வரும் ஹீரோக்களுக்கும் உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். அயர்ன் மேன், ஹல்க், தோர், ஸ்பைடர் மேன், கேப்டன் அமெரிக்கா, நடாசா உள்ளிட்ட கதாபாத்திரங்களுக்கு இணையாக வோல்வரின் மற்றும் டெட்பூல் கதாபாத்திரங்களுக்கும் ரசிகர்கள் உள்ளனர்.


ரியான் ரெனால்ட் மற்றும் ஹக் ஜேக்மேன் நடித்துள்ள 'டெட்பூல் & வோல்வரின்' கடந்த மாதம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது. இது 2024-ம் ஆண்டில் வெளியான படங்களில் ஆரம்பத்திலேயே அதிக வசூலை பெற்ற படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இந்தபடம் அமெரிக்கா மற்றும் கனடாவில் இதுவரை 392.5 மில்லியன் டாலர்களுடன் அதிக வசூல் செய்துள்ளது.


இந்த படத்தில் ரியான் ரெனால்ட் 'மெர்க் வித் எ மவுத்' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் குறித்து இவர் தனது கருத்துகளை பதிவிட்டுள்ளார். அதாவது, 'டெட்பூல் மற்றும் வோல்வரின்' அனைத்து சாதனைகளையும் முறியடித்து. உலகளவில் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

இந்த நிலையில், நடிகர் ரியான் ரெனால்ட் திரைக்கு பின்னால் எடுக்கப்பட்ட காட்சிகளையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் நடிகர் ஷான் லெவி மற்றும் ஹக் ஜேக்மேன் ஆகியோரைப் பாராட்டினார். எனது நீண்டகால இணை எழுத்தாளர்களான ரெட் ரீஸ் மற்றும் பால் வெர்னிக் இவர்கள் இல்லாமல் டெட்பூல் திரைப்படம் உருவாகி இருக்காது என்று குறிப்பிட்டுள்ளார். இந்தப் படத்தில் நடித்த ஒவ்வொருவருக்கும் நன்றி. பார்த்த அனைவருக்கும் நன்றி. இதில் புதிய கதாபாத்திரங்களுடன் ஒரு நண்பர்களை உருவாக்குவது மற்றும் கடந்த காலத்திலிருந்து நாம் விரும்பும் சில கதாபாத்திரத்தை கொண்டுவருவதும் மிகவும் கடினமான ஒன்று என கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்