< Back
சினிமா செய்திகள்
தர்மேந்திரா உடல்நிலை குறித்து பரவிய வதந்தி
சினிமா செய்திகள்

தர்மேந்திரா உடல்நிலை குறித்து பரவிய வதந்தி

தினத்தந்தி
|
15 Sept 2023 7:10 AM IST

இந்தி திரையுலகின் மூத்த நடிகர் தர்மேந்திரா. இவருக்கு 87 வயது ஆகிறது. சமீபத்தில் தர்மேந்திராவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து மும்பை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவரது மகனும் இந்தி நடிகருமான சன்னி தியோல் கடந்த 4-ந்தேதி அமெரிக்காவுக்கு அழைத்து சென்றார்.

அங்கு தர்மேந்திராவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. 20 நாட்கள் வரை அமெரிக்காவில் தங்கி இருப்பார் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் தர்மேந்திரா உடல்நிலை குறித்து இரவு நேரத்தில் வலைத்தளத்தில் வதந்தி பரவி பரபரப்பானது. இது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

வதந்திக்கு பதில் அளிக்கும் வகையில் தர்மேந்திரா வலைத்தள பக்கத்தில் நாயுடன் கொஞ்சி விளையாடும் வீடியோவை வெளியிட்டு உள்ளார். அதில் "அமெரிக்காவில் நீண்ட நாட்களுக்கு பிறகு விடுமுறையை அனுபவித்து வருகிறேன். விரைவில் எனது புதிய படத்துக்கு வருவேன்'' என்று பதிவையும் பகிர்ந்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இந்த வீடியோ வைரலாகிறது.

மேலும் செய்திகள்