< Back
சினிமா செய்திகள்
ருத்ரன் படத்தின் வீடியோ பாடல் வெளியீடு
சினிமா செய்திகள்

ருத்ரன் படத்தின் வீடியோ பாடல் வெளியீடு

தினத்தந்தி
|
19 April 2023 10:46 PM IST

பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வெளியான இப்படத்தின் பாடலை நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

ராகவா லாரன்ஸ் நடித்துள்ள ருத்ரன் திரைப்படம் ஏப்ரல் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. இப்படத்தின் மூலம் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். இதில் சரத்குமார், பிரியா பவானி சங்கர், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். . இந்நிலையில், ருத்ரன் படத்தில் இடம்பெற்றுள்ள என்ன பெத்த அம்மாவே என்ற பாடலை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளது. பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வெளியான இப்படத்தின் பாடலை நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

மேலும் செய்திகள்