ரூ.150 கோடி சம்பளம்: அமிதாப்பச்சனுடன் நடிக்கும் கமல்ஹாசன்
|கமல்ஹாசன் வருகையால் இந்த படம் எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது.
சென்னை,
கீர்த்தி சுரேஷ் நடிக்க மறைந்த நடிகை சாவித்திரி வாழ்க்கையை மையமாக வைத்து தயாரான நடிகையர் திலகம் படத்தை இயக்கி பிரபலமான நாக் அஸ்வின் புதிதாக டைரக்டு செய்ய உள்ள படத்தில் அமிதாப்பச்சன், பிரபாஸ் ஆகியோருடன் இணைந்து கமல்ஹாசன் நடிக்க உள்ளார்.
இதுகுறித்து படக்குழு வெளியிட்ட அறிக்கையில், ''நடிகர் கமல்ஹாசன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'புராஜெக்ட் கே' படத்தில் இணைந்துள்ளார். நடிகர் பிரபாஸ், அமிதாப்பச்சன், தீபிகா படுகோனே ஆகியோரும் இந்த படத்தில் நடிக்கின்றனர்.
கமல்ஹாசன் வருகையால் இந்த படம் எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது. கமல்ஹாசன் நடிப்பின் நாட்டம் மொழிகளை கடந்து அனைத்துவகை பார்வையாளர்களையும் மகிழ்வித்துள்ளது. நடிப்பில் அவருக்குள்ள பரந்த அனுபவமும் பன்முகத்திறமையில் இருக்கும் நிபுணத்துவமும் புராஜெக்ட் கே படத்துக்கு மிகுந்த ஆதரவை வழங்கும்.
20 நாட்கள் படப்பிடிப்பில் பங்கேற்கும் கமல்ஹாசன் ரூ.150 கோடி சம்பளமாக பெற உள்ளார்.
புராஜெக்ட் கே படம் அறிவியல், தொழில்நுட்பம், ஆக்–ஷன் மற்றும் திரில்லர் கதைக்களைத்தை கொண்டு உருவாகிறது.