< Back
சினிமா செய்திகள்
ரூ.200 கோடி மோசடி வழக்கு: நடிகை ஜாக்குலின் கோர்ட்டில் ஆஜர்
சினிமா செய்திகள்

ரூ.200 கோடி மோசடி வழக்கு: நடிகை ஜாக்குலின் கோர்ட்டில் ஆஜர்

தினத்தந்தி
|
25 Nov 2022 8:56 AM IST

ரூ.200 கோடி மோசடி வழக்கில் நடிகை ஜாக்குலின் கோர்ட்டில் நேரில் ஆஜரானார்.

இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் ஜாக்குலின் பெர்ணாண்டஸ் ரூ.200 கோடி மோசடி வழக்கில் கைதாகி ஜெயில் இருக்கும் சுகேஷ் சந்திரசேகருடன் தொடர்பில் இருந்ததாக சர்ச்சையில் சிக்கினார். இதுகுறித்து அவர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில் சுகேஷ் சந்திரசேகரிடம் இருந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள பரிசு பொருட்களை ஜாக்குலின் பெற்றதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. ஜாக்குலின் வெளிநாடு செல்லாமல் இருக்க பாஸ்போர்டையும் முடக்கியது. இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை முன்பு ஜாக்குலின் பல தடவை ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். தற்போது இந்த வழக்கு டெல்லி பாட்டியாலா கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஜாக்குலின் கோர்ட்டில் நேரில் ஆஜரானார். அவரது வக்கீல் வாதாடும்போது அமலாக்கத்துறை சம்மன்களுக்கு ஜாக்குலின் ஆஜராகி வாக்குமூலம் கொடுத்துள்ளார். அவர் மீது சந்தேகத்தின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஜாக்குலினை விடுவிக்க வேண்டும்'' என்றார். வழக்கு விசாரணையை அடுத்த மாதம் (டிசம்பர்) 12-ந்தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில் ஜாக்குலினுக்கு கோர்ட்டு ஏற்கனவே ஜாமீன் வழங்கி உள்ளது.

மேலும் செய்திகள்