< Back
சினிமா செய்திகள்
விஜய்க்கு வில்லனாக நடிக்க சஞ்சய்தத்துக்கு ரூ.10 கோடி?
சினிமா செய்திகள்

விஜய்க்கு வில்லனாக நடிக்க சஞ்சய்தத்துக்கு ரூ.10 கோடி?

தினத்தந்தி
|
14 Sept 2022 7:32 AM IST

67-வது படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்க பிரபல இந்தி நடிகர் சஞ்சய்தத்திற்கு ரூ.10 கோடி சம்பளம் கொடுக்க படக்குழுவினர் முன்வந்து இருப்பதாகவும் பேசி வருவதாக தகவல் பரவி உள்ளது.

விஜய்யின் வாரிசு படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்குவதால் அவர் அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ள 67-வது படம் குறித்த தகவல்கள் தொடர்ந்து கசிந்து வருகின்றன. இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே மாஸ்டர் படம் வெளியாகி வரவேற்பை பெற்றது.

67-வது படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்க பிரபல இந்தி நடிகர் சஞ்சய்தத்திடம் பேசி வருவதாகவும், இதற்காக அவருக்கு ரூ.10 கோடி சம்பளம் கொடுக்க படக்குழுவினர் முன்வந்து இருப்பதாகவும் தகவல் பரவி உள்ளது. சஞ்சய்தத் இந்தி திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கிறார். சமீபத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் திரைக்கு வந்து வசூல் சாதனை நிகழ்த்திய கே.ஜி.எப் 2 படத்தில் வில்லனாக மிரட்டி இருந்தார். படத்தின் வெற்றிக்கு சஞ்சய்தத் கதாபாத்திரம் பலமாக அமைந்தது. விஜய்யின் 67-வது படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாள மொழிகளில் எடுக்க இருப்பதால் சஞ்சய்தத்தை நடிக்க வைக்க முடிவு செய்துள்ளனர். இதில் நாயகியாக நடிக்க திரிஷா அல்லது கீர்த்தி சுரேஷை பரிசீலிக்கின்றனர்.

மேலும் செய்திகள்