< Back
சினிமா செய்திகள்
RRR, Sita Ramam Sweeps Filmfare Awards
சினிமா செய்திகள்

'பிலிம்பேர் விருதுகள்': 7 விருதுகளை அள்ளிய ஆர்.ஆர்.ஆர்

தினத்தந்தி
|
13 July 2024 11:23 AM IST

2022ல் வெளியான படங்களுக்கான பிலிம்பேர் விருதுகள் அறிவிக்கப்பட்டன.

சென்னை,

கடந்த 11-ம் தேதி பிலிம்பேர் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. அதில், 2022ல் வெளியான படங்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில், எதிர்பார்த்தபடி, ஆர்.ஆர்.ஆர் மற்றும் காந்தாரா படங்கள் விருதுகளை அள்ளியுள்ளன. அதன்படி. ஆர்.ஆர்.ஆர் மற்றும் காந்தாரா படங்கள் 7 விருதுகளையும், சீதா ராமம் 5 விருதுகளையும் பெற்றுள்ளன.

தெலுங்கில், ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் சிறந்த இயக்குனர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர் உள்ளிட்ட 7 பிலிம்பேர் விருதுகளை வென்றுள்ளது. அதேபோல், சீதா ராமம் திரைப்படத்திற்காக துல்கர் சல்மான், மிருணாள் தாகூர், சின்மயி, ஸ்ரீவெண்ணல சீதாராம சாஸ்திரி உள்ளிட்ட 5 கலைஞர்கள் விருதுகளை வென்றுள்ளனர்.

மலையாளத்தில் சிறந்த படமாக 'நா தான் கேஸ் கொடு', சிறந்த நடிகராக குஞ்சாக்கோ போபன், சிறந்த இயக்குனராக ரத்தீஷ் பால கிருஷ்ணன் பொடுவால் ஆகியோர் பிலிம்பேர் விருதுகளை வென்றுள்ளனர்.

கன்னட மொழியில் சிறந்த இயக்குனர் மற்றும் நடிகராக ரிஷப் ஷெட்டி, சிறந்த நடிகையாக சப்தமி கவுடா என காந்தாரா திரைப்படம் 7 பிலிம்பேர் விருதுகளை வென்றுள்ளது.

மேலும் செய்திகள்