சமந்தாவின் முன்னாள் கணவருடன் காதலா? நடிகை சோபிதா விளக்கம்
|மணிரத்னம் இயக்கிய 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடித்து பிரபலமானவர் சோபிதா துலிபாலா. இவருக்கும், சமந்தாவின் முன்னாள் கணவரும், தெலுங்கு நடிகருமான நாகசைதன்யாவுக்கும் காதல் மலர்ந்துள்ளதாக கிசுகிசுக்கள் பரவி உள்ளன. இருவரும் ஜோடியாக சுற்றும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.
லண்டன் ஓட்டல் ஒன்றில் இருவரும் சாப்பிடும் புகைப்படமும் வலைத்தளத்தில் கசிந்தது. இதன் மூலம் இருவரும் காதலிப்பது உறுதியாகி இருப்பதாக பலரும் பேசினர். இதற்கு சோபிதா துலிபாலா விளக்கம் அளித்து இருக்கிறார்.
இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், "என்னை பற்றி காதல் வதந்திகள் பரவி உள்ளது. யாரோ ஏதோ சொல்கிறார் என்று அதையெல்லாம் கண்டு கொள்வதும், அதற்காக வருத்தப்படுவதும் பிரயோஜனம் இல்லை. அந்த வதந்திக்கும், எனக்கும் சம்பந்தமே இல்லாதபோது அவசரமாக பதில் அளிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.
அதேபோல எந்த தவறும் செய்யாதபோது பயப்பட வேண்டிய அவசியமும் இல்லை. என் வேலையை நான் செய்து கொண்டு போகிறேன் அவ்வளவுதான். பொன்னியின் செல்வன் வெற்றி படத்தில் நடித்த மகிழ்ச்சியான நினைவோடு இருக்கிறேன்'' என்றார்.