ரஜினியை மிரட்டும் வில்லன் நடிகர்
|ரஜினிக்கு வில்லனாக நடிகர் வசந்த் ரவி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
'அண்ணாத்த' படத்தை தொடர்ந்து நெல்சன் இயக்கி வரும் 'ஜெயிலர்' படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். 'எந்திரன்', 'பேட்ட', 'அண்ணாத்த' படங்களை தொடர்ந்து 4-வது முறையாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய், ரம்யா கிருஷ்ணன், பிரியங்கா அருள் மோகன், கன்னட நடிகர் சிவராஜ்குமார் ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் சிவகார்த்திகேயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. சிவகார்த்திகேயன் தற்போது 'மாவீரன்', 'பிரின்ஸ்' ஆகிய படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருப்பதால், இளம் நடிகர் ஒருவர் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். 'தரமணி', 'ராக்கி' போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்த வசந்த் ரவி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவர் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. படப்பிடிப்பு அடுத்த மாதம் ஐதராபாத்தில் தொடங்க இருக்கிறது.