< Back
சினிமா செய்திகள்
ஹரிபார்ட்டர் திரைப்படத்தில் ரூபியஸ் ஹஹ்ரிட் கதாபாத்திர நடிகர் மரணம்
சினிமா செய்திகள்

ஹரிபார்ட்டர் திரைப்படத்தில் 'ரூபியஸ் ஹஹ்ரிட்' கதாபாத்திர நடிகர் மரணம்

தினத்தந்தி
|
15 Oct 2022 1:13 AM IST

ஹரிபார்ட்டர் திரைப்படத்தில் ‘ரூபியஸ் ஹஹ்ரிட்’ கதாபாத்திர நடிகர் மரணமடைந்தார்.

எடின்பர்க்,

90'ஸ் கிட்ஸ்களின் விருப்பமான திரைப்பட தொடர் ஹரிபார்ட்டர். 7 புத்தகங்களை அடிப்படையாக கொண்டு ஹரிபார்ட்டர் தொடர் இதுவரை 8 திரைப்படங்களாக வெளியிடப்பட்டுள்ளது. ஹரிபார்ட்டர் திரைப்படங்களுக்கு உலக அளவில் ரசிகர் பட்டாளம் உள்ளது.

இதனிடையே, ஹரிபார்ட்டர் திரைப்பட தொடரில் ரூபியஸ் ஹஹ்ரிட் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலாமானவர் ஸ்காட்லாந்து நடிகர் ரூபி கால்ட்ரனி. 72 வயதான நடிகர் ரூபி கால்ட்ரனி உடல்நலக்குறைவு காரணமாக ஸ்காட்லாந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் ரூபி கால்டரனி இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஹரிபார்ட்டர் திரைப்பட தொடரில் ரூபியஸ் ஹஹ்ரிட் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்த ரூபி கால்ட்ரனி வயதுமுதிர்வு மற்றும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்