< Back
சினிமா செய்திகள்
ஆர்.ஜே. பாலாஜி நடிக்கும் புதிய திரைப்படம்... தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு
சினிமா செய்திகள்

ஆர்.ஜே. பாலாஜி நடிக்கும் புதிய திரைப்படம்... தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு

தினத்தந்தி
|
20 Jun 2024 5:40 PM IST

நடிகர் ஆர்.ஜே.பாலாஜி இன்று தனது 39-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

சென்னை,

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக பயணத்தை தொடங்கிய ஆர்.ஜே.பாலாஜி தற்போது வெற்றிகரமான கதாநாயகனாக வலம் வருகிறார். சமீபத்தில் ஆர்.ஜே.பாலாஜி இயக்குனர் கோகுல் இயக்கத்தில் வெளியான 'சிங்கப்பூர் சலூன்' திரைப்படத்தில் நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து அவர் 'மூக்குத்தி அம்மன்' திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை நடிகை திரிஷாவை வைத்து இயக்கப்போவதாக தகவல் வெளியானது.

நடிகர் ஆர்.ஜே.பாலாஜி இன்று தனது 39-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த நிலையில் அவரது பிறந்தநாளை முன்னிட்டு ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படத்தை 'குட் நைட்' மற்றும் 'லவ்வர்' போன்ற வெற்றிப் படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

இந்த போஸ்டரில் ரத்தக் கறை படிந்த ஒரு கத்தியால் கேக்கை வெட்டி, ஒரு கையில் கேக் துண்டையும் மறு கையில் மெழுகுவர்த்தியை சிகரெட் போல் பிடித்துக் கொண்டும், சட்டை முழுக்க ரத்த கறைகளுடனும் ஆர்.ஜே.பாலாஜி இருக்கிறார். இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த படத்தின் இயக்குனர், பிற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்