< Back
சினிமா செய்திகள்
ஐசரி கணேஷ் தயாரிப்பில் ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் சிங்கப்பூர் சலூன்
சினிமா செய்திகள்

ஐசரி கணேஷ் தயாரிப்பில் ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் 'சிங்கப்பூர் சலூன்'

தினத்தந்தி
|
18 Nov 2022 3:11 AM GMT

ஐசரி கே கணேஷ் தயாரிக்கும் புதிய படத்துக்கு `சிங்கப்பூர் சலூன்' என்று பெயரிடப்பட்டு உள்ளது. இந்தப் படத்தில் ஆர்.ஜே.பாலாஜி கதாநாயகனாக நடிக்கிறார்.

தமிழ் பட உலகில் பல வெற்றி படங்களை தயாரித்துள்ள வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பில் ஐசரி கே கணேஷ் தயாரிக்கும் புதிய படத்துக்கு `சிங்கப்பூர் சலூன்' என்று பெயரிடப்பட்டு உள்ளது. இந்தப் படத்தில் ஆர்.ஜே.பாலாஜி கதாநாயகனாக நடிக்கிறார். இவர் ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற எல்.கே.ஜி. மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷங்க ஆகிய மூன்று படங்களில் நடித்துள்ள நிலையில், அடுத்து நடிக்க உள்ள இந்தப் படமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

`சிங்கப்பூர் சலூன்' படத்தை கோகுல் டைரக்டு செய்கிறார். இவர் ஏற்கனவே `ரவுத்திரம்', `இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா', `காஷ்மோரா', `ஜூங்கா' போன்ற வர்த்தக ரீதியிலான படங்களை இயக்கி பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆர்.ஜே.பாலாஜி தனது படங்களை அவரே இயக்குவார் அல்லது முதன்மை, உதவி இயக்குனராகவும் பணியாற்றுவார். தற்போது கோகுலுடன் இணைந்துள்ளார். இந்தப் படத்தில் மேலும் பல முக்கிய நடிகர்-நடிகைகள் நடிக்க உள்ளனர். படத்தை அடுத்த வருடம் கோடையில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர்.

மேலும் செய்திகள்